சித்தர் கலைகளில் உயர்நிலை கலைகளில் முதன்மையான கலையே சரகலை ஆகும்.சித்தர் கலைகள் அனைத்தும் இறைவனாகிய தோற்றுவிக்கப்பட்டு பின் அடுத்தடுத்து குருகுல வழி உபதேசமாக சித்தர் பெருமக்களுக்கு உபதேசிக்கப் பட்டவைகள் ஆகும்.
சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே பட்சி தெரிந்தவனை பகை கொள்ளாதே - சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான் - இவை முன்னோர் வாக்காகும். சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே என்பதன் பொருள் சரகலையை இயக்கத் தெரிந்த வனிடம் சரசம் என்ற விளையாட்டுத் தனமாக நடந்து
கொண்டால் சரம் கற்றவன் சீறி, சினந்து வாக்கு விட்டால் அது அப்படியே பலித்து விடும்.ஏனென்றால் பஞ்சபூத சக்திகள் அனைத்தும் சரகலையில் தேர்ச்சி பெற்றவனின் உடல், மனம் ,வாக்கு மூன்றிலும் ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும். ஆனால் தெய்வீகக் கலையான சரகலையினை முறைப்படி குருகுல முறையாக தீட்சை பெற்று இதன் இரகசியங் களை பயிற்சி செய்து சித்தி பெற்ற வருக்கு மட்டுமே இது சாத்தியம். சித்தர் நூல்களை படித்து தானாகவே பயிற்சி செய்து சித்தி பெறுவது என்பது சாத்தியமாகாது
ஏனென்றால் சரகலை எனும் தெய்வீகக் கலையினை அனுபவ முறையாக சித்தி செய்யும் சூட்சும இரகசியங்கள் எந்த ஒரு சித்தர் நூல்களிலும் பகிரங்கமாக வெளியிடப்பட வில்லை. நவக்கிரகங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வல்லமையும், பஞ்சபூத சக்திகள் இக்கலைக்கு இணங்கி வேலை செய்வதாலும் சித்தர் பெருமக்கள் இதன் உண்மை இரகசியங்களை நூல்களில் பதிவு செய்ய வில்லை. மேலும் தனக்கு இணக்கமான சீடருக்கு மட்டும் குணம் ,தகுதி அறிந்து உபதேசமாக தீட்சை அளித்து வந்துள்ளனர்.
நாம் மேலோர் எனப் போற்றப்படும் மகான்கள்,யோகிகள், சித்தர்கள், முனிவர்கள்,ரிஷிகள்,அனைவரும் தெய்வீகக் கலையான சரகலையில் தேர்ச்சி பெற்றவர்களே.தான் இறைநிலையில் சித்தி பெற்று,தன்னை நாடி வரும் அன்பர்கள் குறையினை நீக்கி நல்வழி காட்டவும் சரகலையினை பிரயோகம் செய்துள்ளனர்.
சரகலையின் பிரயோக முறையால் மனம் சார்ந்த பிரச்சினைகள், உடற்பிணிகள்,தொழில் முன்னேற்றம்,தலைமைப் பண்பு,அனைத்து காரிய வெற்றி,தேர்வில் வெற்றி,வெளியூர் பயணங்களில் வெற்றி,நவகிரகங்களின் தீமையை அகற்றவும்,கோர்ட் வழக்குகள் வெற்றி,அனைத்து கலைகளில் தேர்ச்சி,ஜோதிடம், மாந்திரீகம், மருத்துவம், போன்ற துறைகளில் வெற்றி பெறவும்,கடன் நீங்கி பணம் வருவாய் பெறவும்,வாக்கு சித்தி பெறவும்,மேலும் தனக்கு வரும் நன்மை தீமைகளை அறிந்து தானே நிவர்த்தி செய்து கொள்ளவும்,தன்னை நாடி வரும் அன்பருக்கு உதவும் பொருட்டு அமையப்பெற்றது சரகலை சாஸ்திரம் ஆகும்.
மேலும் சரகலை கற்று தேர்ச்சி பெற்றால் இல்லறத்தில் பூரணத்துவ நிம்மதி,சந்தோசம்,மகிழ்ச்சி பெறுவதுடன் சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான் என்பதற்கிணங்க ஆன்மீக இறைநிலை மெய்ஞான சித்தியும் அடையலாம்.