தீபாவளி (diwali oil bath) அன்று எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்?
25/09/2024
பதில்: தீபாவளி அன்று அம்மாவாசை நேரத்தில் மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் . அதுவும் குறிப்பாக காலை பிரம்ம முகூர்த்தத்தில் மட்டும் தான் குளிக்க வேண்டும். கண்டிப்பாக நல்லெண்ணெய்யை பயன்படுத்தித்தான் குளிக்க வேண்டும். உதாரணமாக 2019 அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தீபாவளி வந்தது, அனைவரும் ஞாயிற்றுக்கிழமை காலை எண்ணெய் தேய்த்து குளித்து இருப்பீர்கள், ஆனால் அன்று 27ம் தேதி மதியம் அம்மாவாசை ஆரம்பித்து திங்கள்கிழமை மதியம் வரை அம்மாவாசை இருந்தது. எனவே திங்கள் கிழமைதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கான சரியான நாளாகும் . ஆனால் அரசாங்கம் ஏதாவது ஒரு தேதியை அரசு விடுமுறையாக தீபாவளியாக கொடுக்கும். அந்த நாளை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அமாவாசை எந்த நாளில் விடியற்காலை வருகிறதோ அதுவே சிறந்த நாள் . எனவே இனிமேல் தீபாவளியன்று திண நாட்காட்டி அதாவது டெய்லி காலண்டர் ஐ பார்த்து அமாவாசை எப்போது ஆரம்பிக்கிறது, எப்பொழுது முடிகிறது என்று தெரிந்துகொண்டு அம்மாவாசை விடியற்காலை வரும் நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது. கண்டிப்பாக நல்ல எண்ணங்கள் மட்டும் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் பணம் இருக்கு என்பதற்காக ஆலிவ் ஆயிலில் குளிக்கக்கூடாது . வேறு எந்த எண்ணெயிலும் குளிக்கக்கூடாது நல்லெண்ணெய் குளியல் மட்டுமே சிறந்தது . அதுவும் தீபாவளி அன்று மட்டுமே சூரியன் உதிக்கும் நேரத்திற்கு முன்னால் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே சூரியன் உதிக்கும் நேரத்திற்கு முன்பு எண்ணை தேய்த்து குளிக்கலாம் வேறு எந்த நாளிலும் சூரியன் உதிப்பதற்கு முன்பு எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. சூரியன் உதித்த பின்பு மட்டும்தான் குளிக்கவேண்டும் . எனவே இந்த விஷயத்தை புரிந்து கொண்டு இனிமேல் வரும் தீபாவளி களில் நாம் அமாவாசை நேரம் பார்த்து , பிரம்ம முகூர்த்தம் ஆகிய சூரியன் உதிக்கும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்பு ஏதாவது ஒரு நேரத்தில் குறித்து நாம் பிரபஞ்ச சக்தியை ஒரு வருடத்திற்கு தேவையான ஆற்றலை பெற்றுக் கொள்வோமாக. ---